Thursday, April 11, 2019

Maiden tamil story

முன்பு ஒரு காலத்தில், அந்திபுரம் என்னும் கிராமத்தில் இரண்டு நண்பர்கள் வாழ்ந்து வந்தனர். அடுத்து அடுத்து வீட்டில் இருந்ததால் சிறு வயது முதல் ஒன்றாக விளையாடி சாப்பிட்டு பள்ளி,கோவில் எல்லாம்சுற்றி வந்தனர் பகல் முழுவதும் பள்ளி கல்லூரி என்று ஒன்றாக இருந்தாலும் மாலை ஆறு மணிக்கு இருவரும் சிவாவிஷ்னு ஆலயம் சென்று அதன் குலகரை படியினில் உட்கார்ந்து மணிக்கணக்காக பேசுவார்கள். கிராமத்தில் உள்ள அனைவருக்கும் இவர்கள் நட்பு பார்த்து, சிரிப்பு, பொறாமை, எகத்தாளம் எல்லாம் வரும் . ஆனால் இவிருவரும் அதை எதயும் பொருட்படுத்தாமல் தங்கள் பொழு தை கழிதார்கள். ஒருவர் பேர் சீனிவாசன் ஒருவர் பேர் ராமலிங்கம்.
நாட்கள் உருண்டு ஓடின . இருவர்  வாழ்கையில் பொறுப் புகள் கூடுதலாக, சேர்ந்த செலவழிக்கும் நேரம் குறைந்து வந்தது. ஆனால் எந்த நிலையிலும் மாலை நேரத்தில் கோவிலில் சந்திப்பது நிற்க வில்லை. அவர்கள் மனைவிகள் கேட்டார்கள் அப்பிடி என்னதான் பேசுவீர்கள் இரெண்டு பெரும். அவர்கள் சொன்னார்கள், புத்தகம், பாட்டு, அரசியல்,சொந்த பிரச்சினை என்று எவ்வளோ இருக்கு பேச. மனம் திறந்து பேச விஷயங்களுக்கு பஞ்சமா என்று ஒன்று போல் பதில் அளித்தார்கள். பல வருடங்கள் கழித்து அடுத்து அடுத்த தலைமுறைகள் படிப்பு பிழைப்பு என்று வேறு வெருஇடம் சென்று விட்டனர். சீனிவாசன் குடும்பத்தினர், Coimbatore, pollachi என்று போய்விட்டனர்.ராமலிங்கம் குடும்பத்தினர் erode , Madurai சென்று கடைசியில் சென்னையில் இருந்து விட்டார்கள் .இரு குடும்பத்திற்குள் இருந்த தொடர்பு விட்டு போய்விட்டது.
1991 இல் T G Geetha என்று ஒரு பெண்மணி சுங்கமற்றும் கலால் துறை யில் அதிகாரியாக சேர்ந்தால். இரண்டு வருடம் Coimbatore il   பணியாற்றிவிட்டு சென்னைக்கு மாற்றலாகி வந்தால்1993யிள். அதே நேரம் 1992இல் L ஜெயந்தி என்ற பெண் பங்களோரில் அதே  சுங்க மற்றும் கலால் துறை யில் பணிக்கு சேர்ந்து தனது திருமணம் முடிந்து சென்னையில் 1993 யில் வந்து செட்டில் ஆகி விட்டாள்.
ஒரு நாள் அலுவலகத்தில் ஜெயந்தி யை சந்தித்த ஒரு சக ஊழியர் , madam நலமா எப்போ வந்தீர்கள் Coimbatore il இருந்து " என்று கேட்டார். ஜெயந்திக்கு ஒன்றும் புரிய வில்லை. அவள் பதில் அளித்தால் நான் Bangalore இளிருந்து வந்திருக்கிறேன் . Coimbatore அல்ல. Madam நீங்கள் கீதா தானே ? இல்லியே! நான் ஜெயந்தி. Oh sorry madam. என்று அவர் சென்று விட்டார். இதே போல் கீதா விடமும் பலபேர் நலம் விசாரித்தார்கள் ஜெயந்தி என்று எண்ணி.
1999 ஆம் வருடம் இவிருபென்மணிகளும் ஒரே அலுவலகத்தில் பணியாற்ற நேர்ந்தது. இருவரும் சந்தித்துக் நட்பு மலர்ந்தது. அவர்களை சுற்றி இருப்பவர்கள் நிறைய பேர் அவர்கள் இருவருக்கும் முக சாயல் ஒரேபொள்  இருப்பது பற்றி பேசினார்.
பதவி உயர்வு கிடைத்ததா பின் இருவரும் ஓர் அறையில் பணி செய்ய நேர்ந்தது.அவர்கள் நட்பு மிகவும் பலம் அடைந்தது. இருவருக்கும் இளையராஜா இசை ,புத்தகம், சுஜாதா வின் எழுத்து, நகைச்சுவை ,சொந்த சோக கதைகள் என்று பல விதமான கதைகள் பேசும் பொழுது  தான் அறிந்து கொண்டார்கள் அவர்கள் இருவருக்கும், அந்திப்புரம் பூர்விகம் என்றும் அவர்கள் தாதன் மார்கள் அந்த ஊரில் ஒன்றாக இருந்தார்கள் என்றும்.
இந்த விஞான உலகத்தில் மரபுஅனு வழியாகப் நமக்கு நம் முன்னோர்கள் முக சாயல் , குணாதிசயம் எல்லாம் வரும் என்று கேள்வி பட்டு இருக்கோம். ஆனால் கருத்து ஒன்று சேர்ந்த இரு நண்பர்களின் வாரிசுகளுக்கும், அந்த மன ஒற்றுமை ,சிந்தனைகள் கூட ' gene' மூலம் வந்திருக்க வாய்ப்பு உள்ளதோ என்று தோன்றுகிறது. அந்தத் சீனிவாசன் ராமலிங்கம் போல் இன்று ஜெயந்தி கீதா நட்பு வளர்கிறது. உலகத்தில் எவ்வளவோ அதிசயங்கள் உண்டு அது போல் இதுவும் ஒன்று.

No comments: